Friday, May 1, 2026

👉 நீ விலகினாலும்… நினைவுகள் என்றும் விலகாது 💔 | Heart Touching Love Kavithai Tamil

 


💔 மனதை உருக்கும் தமிழ் காதல் கவிதை

நீ விலகிச் சென்றாலும் உன் நினைவுகள் என்றும் என்னைவிட்டு விலகாது... காலம் கடந்து சென்றாலும் நம் காதலை என்றும் மறவாமல் இருப்பேன்...

இந்த கவிதை பிரிவுக்குப் பிறகும் மறையாத நினைவுகள், உண்மையான காதல் மற்றும் காலம் கடந்தும் நிலைக்கும் உறவை அழகாக வெளிப்படுத்துகிறது.

💖 Love Kavithai Tamil | Heart Touching Kadhal Kavithaigal
💔 Love Failure Kavithai | Emotional Tamil Quotes

👉 இதுபோன்ற மேலும் தமிழ் காதல் கவிதைகள் படிக்க எங்கள் blog ஐ தொடர்ந்து பாருங்கள்.


❤️ நம் காதல் என்றும் நிலைக்கும்... ❤️


#kathalkavithai #tamilkavithai #lovefailure #hearttouching
#tamilpoetry #kadhal #sadkavithai #tamilquotes

#brokenheart #tamilfeelings #lovepoetry #tamillines 

Tuesday, May 8, 2018

Sunday, May 6, 2018

நான் சொல்லுவது எல்லாம்



நான் சொல்லுவது எல்லாம் உண்மையுமில்லை, உன் காதுகளில் கேட்டது எல்லாம் பொய்யுமில்லை. ஆனால் உன் கண்களும் என் கண்களும் சந்திக்கும் போது உண்மை மட்டுமே பிறக்கிறது........

Friday, May 4, 2018

என் எதிர்காலம்



திரும்பிக் கூட 
பார்க்காத உன்னை 
திரும்பத் திரும்ப 
பார்க்கிறேன் ...!!
ஒருநாள் 
என்னை 
திரும்பிப் 
பார்ப்பாய் என்று ...
நீ 
திரும்பிய 
போதுதான் 
தெரிந்தது.... 
என் 
எதிர்காலமே 
திரும்பியதென்று ...!!!

Wednesday, May 2, 2018

Monday, April 30, 2018

கானல் நீர்



கருவிழியின் இருவிழியால் 
என்னை ஒரு வழியாக்கினால்.. 
கானல் நீர் எனத்தெரிந்தும் 
காதல் என்னில் உன்னைக் 
காணும் அந்த நொடிகளில்..

கல்நெஞ்சக்காரி



கல்நெஞ்சக்காரி..! 
கல்லென்று நினைத்தாயோ 
என் இதயத்தை..? 
உளி கொண்டுடைக்க.? - உன் 
விழிகொண் டுடைத்தாலே 
போதும் விதியென்று 
மடிவேனடி..!!

Tuesday, October 3, 2017

உன் நினைவு



கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.. ...
ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும்..

என் பலவீனங்களில் ஒன்று..................!!!



எவ்வளவு தான் நீ என்னை
விலக்கி வைத்து
காயப்படுத்தினாலும்
மீண்டும் மீண்டும் நான்
உன்னிடமே வருவது என் பலவீனங்களில் ஒன்று..................!!!

பேராசை



பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு 
வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,
நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....!

என்னுயிர் என்னிடம் இல்லை....!!



என் சங்கீதமும்
சந்தோஷமும்.....
என் கவலையும்
கண்ணீரும்....
எல்லாமே நீயென 
வாழும் என்
வாழ்க்கை......நீயில்லை
என்றால்
நிச்சயம்
என்னுயிர் என்னிடம் 
இல்லை....!!