Showing posts with label ♪ FAVORITES ♪. Show all posts
Showing posts with label ♪ FAVORITES ♪. Show all posts

Saturday, September 9, 2017

என் மனம் உன்னையே தேடுகிறது....



உன் சிரிப்பில் நான் 

மயங்கவில்லை..... 

உன் பார்வையில் நான் 

தொலையவில்லை... 

இருந்தும் என் மனம் உன்னையே 

தேடுகிறது....ஏன் ?



நீயும் நானும்



பார்க்கக்கூடாது 

என்று நானும் 

பார்க்கக்கூடாது 

என்று நீயும் 

நினைத்துக்கொண்டே 

பார்த்துவிட்டோம் 

நான் பார்க்கிறேனா 

என்று நீயும் 

நீ பார்க்கிறாயா 

என்று நானும் ....!!!


தொடர்ந்தும் ஏமாறுகின்றேன் ஏமாற்றுவது நீ என்பதால்...



இத்தனை வருடங்களில் 

உனக்காக - நான் 

இழந்தது மட்டுமே அதிகம் - நீ 

ஏமாற்றுக்கின்றாய் என்று தெரிந்தும்கூட 

தொடர்ந்தும் ஏமாறுகின்றேன் 

ஏமாற்றுவது நீ என்பதால்...


Thursday, September 7, 2017

வானவில்லாய் வந்தவள் நீ !.......

என் 
வாழ்வில் வர்ணங்கள் 
காட்டும் வானவில்லாய் 
வந்தவள் நீ !.......


ஆதலால்தானோ !!......
உன்னை 
வர்ணிக்கும் முன்பே 
மறைந்து போனாய் !!!........


உன் நினைவு

"விழி மூடும் நேரம் எல்லாம் 
வீணாக போனதில்லை..!! 
விண்ணை தொடும் 
உன் நினைவு 
உள்ளுக்குள் உட்கார்ந்து 
என்னை தினம் தாலாட்டுதடி"..!!


Tuesday, August 1, 2017

எனக்கொரு ஆசை



இமைக்காத நொடியெது.. 
உன்னை நினைக்காத பொழுதெது??? 
காதலுக்கு காரணம் கேட்பவளே 
காத்திருப்பின் கவலை உனக்கு புரியுமா ??
உன்னோடு ஒற்றை விரல் கோர்க்கவே ஆசை .. 
கடற்கரை மணலில் அல்ல 
கல்யாண பந்தலில்...

Monday, July 31, 2017

💝காதல்💝

நீ என்னோடுபேச வேண்டும்
என்பதில்லை என் ஆசை
நீ மகிழ்ச்சியாக இருப்பதை
நான் சற்று விலகி இருந்து
கண்டால் போதும்
💝காதல்💝

Wednesday, July 19, 2017

உன் நினைவுகள்

நீ விலகிச் சென்றாலும் உன் 
நினைவுகள் என்றும் என்னைவிட்டு விலகாதடி 
காலம் கடந்து சென்றாலும் நம் 
காதலை என்றும் மறவாமல் இருப்பேனடி

கொட்டும் மழை நின்ற பிறகு 
குடை பிடிக்கும் காளானென்று நினைத்தாயோ 
வீசும் புயல் காற்றுக்கும் விழாமல் 
வேரூன்றி நிற்கும் ஆலமரமடி நம்காதல் 

நலமா நீ....யாரிடம் கேட்பேன்



நலமா நீ....யாரிடம் கேட்பேன் 
உன் மீதான என் உணர்வுக்கு என்னவென்று பெயர் வைப்பேன் 
என் தேடலின் பொருளாய் நீ 
என் விரல்களின் கவிதை நீ 
என் எண்ணமும் எழுத்தும் நீ 
என் ஏக்கம் நீ 
என் தவிப்பும் நீ 
என்னுள் எல்லாமுமாய் நீ 
என் விழி அறியா ஓவியமாய் நீ 
என்று காண்பேன் உன்னை.. 
என் எண்ணங்களை மட்டுமே தூது அனுப்பி உள்ளேன்... 
அதன் வலுகொண்டு உன்னை சேர்வேனா????

Saturday, July 15, 2017

Thursday, July 13, 2017

உன்னை நினைக்காமல் எப்படி வாழ்வேணடி


என்னை நினைக்கதே என்று சொல்லிவிட்டாய் நீ எளிதில்! 
உன்னை நினைத்தால் தானடி மறப்பதற்கு 
என் நினைவெல்லாம் நீதனடி 
உன்னை நினைக்காதே என்ற வார்த்தையே என்னால் நினைக்க முடியவில்லை 
உன்னை நினைக்காமல் எப்படி வாழ்வேணடி 
உன்னை நினைக்காத அந்த நொடியே 
என் வாழ்வின் கடைசி நொடி 
I love u idiot...
#Mr.K


Wednesday, July 12, 2017

நிழலாய் நீ என் அருகில்

நிழலாய் நீ என் அருகில் 
இருக்கும் வரையில் நித்தம் 
நானும் புதிதாய் பிறந்தேன்.. 
நீங்கி நீயும் சென்ற 
பின்னே கருகிக் கரையும் 
மெழுகாய் ஆனேன்..

இரவுகளைக் கொன்று 
கனவுகளில் கதை பேசிடும் 
நேரங்களில் நடுநிசியில் 
மலரும் மலராய் இருந்தேன்... 
கரம் விட்டு நீயும் காதல் 
கொண்டு சென்ற பின்னே 
தலையணை நனைத்திடும் 
கண்ணீராய் ஆனேன்..

உன் அருகில் இருக்கும் 
பொழுதுகள் அனைத்தும் 
விண்ணில் பறந்திடும் 
பறவையாய் இருந்தேன்.. 
நீ விட்டு விலகிச் சென்ற 
பின்னே ஊமை கானம் 
இசைக்கும் கவிதைகளாய் 
ஆனேன்..

உன்னை அனுதினம் 
ரசித்து மகிழ்ந்திடும் 
ரசிகையாய் இருந்தேன்.. 
தொலைதூரம் நீயும் 
தொலைவாகிப் போன 
பின்னே தனிமையில் 
காயும் சருகாய் ஆனேன்... 
தினம் உன்னை எண்ணித் 
தேய்கின்ற நிலவாயும் 
ஆனேன்...

Sunday, July 9, 2017

உன்னை காதலிக்க நினைத்த பின்....

அன்பே
ஒருநாளும் உன்னை
நதியாக நினைத்தது இல்லை
இருந்தும் உன் பின்னால்
பாய்கிறேன்!
ஒருபோதும் உன்னை கடலாக
நினைத்தது இல்லை
இருந்தாலும் உன் நினைவுகளால்
அலைகளாக காட்சியளிக்கின்றேன்,
காற்றைப்போல் உன்னை
ஒரு நாளும் நினைக்கவில்லை!
இருந்தும்
நீயே என் சுவாசமாக இருக்கின்றாய்!
மழையாக உன்னை ஒருநாளும்
நினைக்கவில்லை!
ஆனால்
உன் விழி என்னும் குடையை
அடைய நினைக்கின்றேன்,
வெறுப்பில் கூட வெயிலில் நின்றது
இல்லை
இருந்தும் உன் நிழலை
தேடுகின்றேன்!,
உன்னை ஒருநாளும் என் உயிராக
நினைக்கவில்லை
இருந்தும்
என் இதயம் உனக்காக துடிக்கின்றது,
உன்னை நேரமாக ஒருநாளும்
நேரமாக நினைக்கவில்லை!
ஆனால்
என் நிமிடங்கள் எல்லாம் உனக்காக
காத்துக் கொண்டிருக்கின்றது!!,
இரவாக உன்னை என்னாலும்
எண்ணவில்லை இருந்தும்
என் கனவுகள் உனக்காக
கண்விழிக்கின்றன!,
உன்னை ஒருநாளும்
பாதைகளாக பார்க்கவில்லை!
ஆனால்
என் பயணங்கள் எல்லாம்
உன்னுடன் போகவேண்டும் என்று
நினைக்கிறேன்!,
கண்ணில்லா காதலையும்
காண நினைக்கின்றேன்!
கண்ணே
உன் கண்களை கண்ட பின்,
உயிரில்லா காதலுக்கும்
உயிர் கொடுக்க நினைக்கிறேன்!
உயிரே உன்னை
காதலிக்க நினைத்த பின்............
- ɨ ℓ๏˅€ ¥๏µ ๓๏ยภเรђค
#mathivanan

ஒருதலைக்காதல்


என் காதலும் 
என் கவிதையும் 
என் கண்ணீரும் 
என் கண்ணியமும் 
என் கனிவான பேச்சும் 
என் காதல் பார்வையும்

இது வரை உன் இதயத்தில் 
எந்த ஒரு சலனமும் ஏற்படுத்தவில்லை எனில் 
என் காதல் 
"ஒருதலைக்காதல் "ஆகவே 
இருந்துவிட்டு போகட்டும் 
இறுதிவரை உன்மேல் மட்டும் !

Friday, July 7, 2017

இனியவளே உன் முகம்..,..


இமைகள் மூடினால் 
இருளாய் தோன்றவில்லை ! 
இனியவளே உன் முகம் வந்து நினைவுகளாய் ! 
இதயத்தில் இரட்டிப்பு வெளிச்சம் தருகிறது !

காதல் காதல் காதல்

உன்னோடு அனுதினம்
பேசினால்தான்
காதலா ??
உன்னை தினம் ஒருமுறை 
முத்தமிடுவதுதான் 
காதலா ??
உன்னோடு
செல்ல சண்டை போட்டால்தான்
காதலா ??
உன்னை
நேரில் பார்த்தால்தான்
காதலா ??
உன்னோடு
இணையத்தில்
இரவு பகல் பேசினால்தான்
காதலா ??
உனக்காக
கவிதை எழுதினால்தான்
காதலா ??
உன்னோடு
பேசும் போது அடிக்கடி
உன் பெயரை சொன்னால்தான்
காதலா ??
இல்லை,......
கண்ணே,மணியே ,செல்லம், குட்டி ,புஜ்ஜி ,
தங்கம் ,
என்று கொஞ்சினால்தான்
காதலா ??
இது இல்லை காதல்
இவை
அனைத்திற்கும் சொந்தமான
நீ இப்போது
என்னோடு இல்லையே
என்று
நிமிடம்தோறும்
உன்னை
நினைத்து உருகி சாவுறேன் பாரு
இதுதான் டி காதல் !!!
உன் நினைவுகள் மட்டும் போதும்
என் உயிர் வாழ,,,,
-Mr K

என்னவளே ♥♥♥


என்னவளே...
என் நினைவெல்லாம்
நிறைந்தாயே!
என்னுள் 
உயிராக உரைந்தாயே!
முடிவில்
என்னை மறந்துவிடு
என்று கூறி
மறைந்தாயேடி !
நீ கூறி
எதை கேட்கவில்லை
நான்...
இதையும் செய்வேன்
உனக்காக..
என் உயிரெல்லாம்
உருகட்டும் !
ஓசை எல்லாம்
அடங்கட்டும்!
அப்போதும்
முயற்சிப்பேனடி !...
என் மரணப்படுக்கையிலும்
உன்னை மறக்கவே முயற்சிப்பேனடி !!!...
இப்படிக்கு
உன்னவன் -மதி 

♥ நீ ♥

வலியின்
இன்பம்
தொலை தூர 
சாரல்
நீ
ஆரியபட்டாவின்
கடிகாரம்
நீ
வைகாசியின்
வாடை
நீ
புல்லாங்குழலின்
துளை
நீ
என் தாடியின்
நியாபகம்
நீ
என் கண்களின்
சிமிட்டால்
நீ
என் இரவின்
ஆரம்பம்
நீ
பைத்தியக்காரனின்
அழுகை
நீ
கூந்தலின்
உதிரல்
நீ
என் சுவாசத்தின்
ஓசை
நீ
என் மரணத்தின்
உயிர்ப்பு
நீ
என் மடியில்
உறங்கும் கவிதை
நீ
என் வார்த்தையின்
முடிவு
நீ
இப்படிக்கு
நீ .
-Mr.K

Tuesday, February 2, 2016

என் காதல் புரியவில்லை உனக்கு இருந்தும் காதலிக்காமல் இருக்க முடியவில்லை எனக்கு



என் காதல் புரியவில்லை உனக்கு !
இருந்தும் காதலிக்காமல் இருக்க முடியவில்லை எனக்கு !!

Monday, February 1, 2016

என் நினைவுகள் உன்னில்



என் நினைவுகள் உன்னில் 
இல்லை என்று - ஆனால் 
என் மனமோ சொல்கிறது 
நீ என்னை மறக்கவில்லையென்று... 
அதனால் தான் இன்னும் 
நான் உயிருடன் இருக்கிறேன் 
அன்பே உன் நினைவுகளுடன்...!
இனியும் காலம் கடத்தாதே 
விரைவில் வந்துவிடு..!!