Wednesday, August 2, 2017

இதயத்தில் இடம்

இதயத்தில் இடம் தந்தும்
உன் அருகே எனக்கோர் இடமில்லை,
உயிரில் உனைச் சுமந்தும்
உன் வாழ்வில் கலந்திட வழியில்லை,
இரவெல்லாம் உன் கனவுகள்
அதில் ஏனோ நீயும் வரவில்லை,
வழியெங்கும் உன் பயணம்
வழித்துணையாய் எனை ஏன் சேரவில்லை,
மனதில் ஆயிரம் ஆசைகள்
அதை எனக்காய் தந்திட மனமில்லை,
பிரிவில் பெரும் துயரம்
என் முகவரி அறிந்தும் வரவில்லை,
நிதமும் படுத்தும் நினைவுகள்
சொல்லிட நா ஏனோ எழவில்லை,
வேதனை தாளாத இரவுகள்
நமக்கான நாட்கள் ஏன் உதிக்கவில்லை,
சொல்லிட காத்திருக்கும் வார்த்தைகள்
உன் முன் மட்டும் பேச முடியவில்லை,
வீதியெங்கும் உன் முகம்
உன் வாசல் காண இயலவில்லை,
பூவையிவள் காதல் சொல்ல
வாய்மொழிந்து நீ மறுக்கவுமில்லை,
காலம் தரும் சோதனையால்
இது நம் காதல் கைகூடும் நாளில்லை...😭😭😭😭😭😰😰

3 comments: