Sunday, July 16, 2017

காதலி போல்....♥


நீரில்லா கடல் 
நிழலில்லா மரம் 
விலகாத கதிர் 
விதையில்லா பயிர் 
பிரியாத உதடு 
விரியாத மலர் 
புளிக்காத தயிர் 
இறக்காத உயிர் 
உறங்காத கண்கள் 
தேயாத நிலவு 
வீசாத தென்றல் 
ஊதாத சங்கு 
உறையாத தண்ணீர் 
விடியாத இரவு 
அத்தனையும் 
என் 
காதலி போல்....

0 comments:

Post a Comment